உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணியை வீழ்த்தி தென் கொரியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!


உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணியை வீழ்த்தி தென் கொரியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்..!
x

அடுத்த சுற்று ஆட்டத்திற்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும். இதில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

அதன்படி குரூப் எச் பிரிவில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடந்த போட்டியில் தென் கொரியா - போர்ச்சுக்கல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் 5வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரிச்சார்டோ ஹோட்டா ஒரு கோல் அடித்தார்.இதனால் போர்ச்சுகல் அணி முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்க தென் கொரியா அணியின் கிம் யங் வோன் 27வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதனால் ஆட்டம் சமநிலையில் இருந்தது.

2வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 91வது நிமிடத்தில் வாங் ஹி ஷான் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய தென் கொரியா வெற்றி பெற்றது. அடுத்த சுற்று ஆட்டத்திற்கு போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

குரூப் எச் பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கானா - உருகுவே அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றாலும் அந்த அணியால் 2வது சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. தென் கொரியா மற்றும் உருகுவே அணிகள் 3 போட்டியில் , 1 வெற்றி ,1 தோல்வி , 1 டிரா என சமநிலையில் இருந்தன.இதனால் கோல்கள் அடிப்படையில் தென் கொரியா அணி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றது.


Next Story