கர்நாடகாவில் ஆட்சியை இழக்கும் பாஜக...?


கர்நாடகாவில் ஆட்சியை இழக்கும் பாஜக...?
x
தினத்தந்தி 13 May 2023 4:40 AM GMT (Updated: 13 May 2023 6:00 AM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும், ஆம்ஆத்மி சார்பில் 217 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 2,430 ஆண்களும், 184 பெண்களும், ஒரு திருநங்கையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகின.

இதனிடையே, தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பெரும்பான்மை தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 116 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 113 தொகுதிகளில் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 116 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 77 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக கடந்த முறை 104 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் தற்போது 77 இடங்களில் மட்டுமே உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மற்றவை 5 இடங்களில் முன்னிலையில் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 116 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழப்பது உறுதியாகியுள்ளது.


Next Story