ஆப்பிள் ஐ-போன் 15, ஸ்மார்ட் கடிகாரம், ஏர்போட்ஸ்


ஆப்பிள் ஐ-போன் 15, ஸ்மார்ட் கடிகாரம், ஏர்போட்ஸ்
x

மின்னணு சாதனங்களில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு எப்போதுமே சர்வதேச அளவில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்நிறுவனம் ஐ-போன் 14 மாடலைத் தொடர்ந்து தற்போது ஐ-போன் 15 மற்றும் ஐ-போன் 15 பிளஸ் மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஐ-போன் 15 மாடல் 6.1 அங்குல திரை, ஐ-போன் 15 பிளஸ் மாடல் 6.7 அங்குல ஓலெட் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். திரையைக் கொண்டதாகவும் வந்துள்ளது.

ஐ-போன் 14 புரோ சீரிஸ் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட டைனமிக் ஐலேண்ட் நுட்பம் இவ்விரண்டு மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குவாட் பிக்ஸெல் சென்சார் உடைய 48 மெகா பிக்ஸெல் கேமரா இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4-கே ரெசல்யூஷனில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். அவசர கால அழைப்பை செயற்கைக்கோள் மூலமாக அழைக்கும் வசதியை இரண்டு ஆண்டுகளுக்கு இந்நிறுவனம் இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. முன்புற திரையில் செராமிக் கவசம் அளிக்கப்பட்டுள்ளது. இது டெம்பர் கண்ணாடியை விட உறுதியானதாகும். இதில் முதல் முறை யாக யு.எஸ்.பி. சி போர்ட் இணைப்பு வசதி இடம் பெற்றுள்ளது.

இதில் கோர் ஏ 16 பயோனிக் சிப் பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. நினைவகத் திறன் கொண்ட மாடல்கள் வந்துள்ளன.ஐ.ஓ.எஸ். 17 இயங்குதளத்துடன், இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. முன்புறம் 12 மெகா பிக்ஸெல் கேமரா பயன்படுத்தப் பட்டுள்ளது. இது ஆட்டோபோகஸ் வசதி கொண்டது. இளம் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.79,900 முதல் ஆரம்பமாகிறது.

சீரிஸ் 9 ஸ்மார்ட் கடிகாரம்: சீரிஸ் 9 என்ற பிரிவில் புதிய மாடல் ஸ்மார்ட் கடிகாரங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது ஓ.எஸ். 10 இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. இதில் எஸ் 9 எஸ்.ஐ.பி. சிப் பிராசஸர் உள்ளது. சூரிய வெளிச்சத்திலும் எழுத்துகள் தெளிவாகத் தெரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு கையிலேயே இயக்கும் வசதி அல்லது இருமுறை தொடுதல் மூலம் செயல்படுத்தும் வசதிகள் கொண்டது. இதில் உள்ள உயர் தொழில்நுட்பத்தால் திரையைத் தொடாமலேயே இதை செயல்படுத்த முடிவது சாத்தியமாகியுள்ளது. அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மேல்பாகத்தைக் கொண்டது. கார்பன் நியூட்ரலால் செய்யப்பட்ட மாடலும் கிடைக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் காட்டவும், இதய துடிப்பைக் காட்ட இ.சி.ஜி. செயலியும் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.41,990 முதல் ஆரம்பமாகிறது.

ஏர்போட்ஸ்: இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஏர்போட்ஸ் புரோ வயர்லெஸ் இயர்போனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங், புளூடூத் 5.3 இணைப்பு, இரண்டு மைக்ரோ போன், வெளிப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் இதில் உள்ளது. 30 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.24,900.


Next Story