பிராவியா எக்ஸ் 75 எல் ஸ்மார்ட் டி.வி


பிராவியா எக்ஸ் 75 எல் ஸ்மார்ட் டி.வி
x
தினத்தந்தி 5 May 2023 3:30 PM GMT (Updated: 5 May 2023 3:31 PM GMT)

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனத் தயாரிப்புகளில் பிராவியா மாடல் டி.வி.க்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

இதில் 43 அங்குலம், 50 அங்குலம் மற்றும் 65 அங்குல அளவுகளில் எக்ஸ் 75 எல் என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட் டி.வி.யை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

4-கே ரெசல்யூஷனைக் கொண்ட ஹெச்.டி. எல்.இ.டி. திரையைக் கொண்டவை. வீடியோகேம் விளையாடுவதற்கும், திரைப்படங்களைக் கண்டு ரசிப்பதற்கும் ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டால்பி ஆடியோ சிஸ்டம் கொண்டது. இனிய இசையை வழங்க 20 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. 43 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.69,900. 50 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.85,900. 65 அங்குல மாடலின் விலை சுமார் ரூ.1,39,900.


Next Story