ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 5


ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 5
x
தினத்தந்தி 5 May 2023 4:00 PM GMT (Updated: 5 May 2023 4:00 PM GMT)

ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் எஸ் 5 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

மிருதுத் தன்மை அளிப்பதற்காக முனைப்பகுதியில் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது. புளூடூத் வி 5.2 இணைப்பு வசதி கொண்டது. கூகுள், அலெக்ஸா உள்ளிட்ட குரல்வழி கட்டுப்பாட்டு கருவிகள் மூலமும் இதை செயல் படுத்தலாம். எல்.இ.டி. டிஸ்பிளே வசதியுடன் சார்ஜிங் கேஸ் உள்ளது. எந்த அளவிற்கு சார்ஜ் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சிறிய அளவில் அழகுற வடிவமைக்கப் பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் நான்கு மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சார்ஜிங் கேசில் 15 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரத்தை சேமித்து வைக்கலாம். இதன் விலை சுமார் ரூ.2,999.


Next Story