நோக்கியா சி 22 அறிமுகம்


நோக்கியா சி 22 அறிமுகம்
x

நோக்கியா சி 22 அறிமுகம்நோக்கியா பிராண்ட் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம், புதிதாக சி 22 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.7,999. குறைந்த விலையிலான இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் செயலி உள்ளது.

இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் யுனிசாக் 9863 ஏ.ஐ. எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது.

2 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. நினைவகத் திறனை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதியும் கொண்டது.

பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பின்பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.


Next Story