மோட்டோ ஜி 14 ஸ்மார்ட்போன் அறிமுகம்


மோட்டோ ஜி 14 ஸ்மார்ட்போன் அறிமுகம்
x

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் மோட்டோரோலா நிறுவனம் புதிதாக மோட்டோ ஜி 14 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.5 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்ட இதில் 2 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி 616 ஆக்டாகோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 20 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. ஆகாய நீலம், ஸ்டீல் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.9,999.


Next Story