மோட்டோ ஜி 73 ஸ்மார்ட்போன்


மோட்டோ ஜி 73 ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 28 April 2023 2:45 PM GMT (Updated: 28 April 2023 2:45 PM GMT)

மோட்டோரோலா நிறுவனம் புதிதாக ஜி 73 என்ற பெயரில் புதிய 5-ஜி மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.5 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது.

5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 30 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. நீலம், வெள்ளை நிறங்களில் வந்துள்ள இந்த மாடல் ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.18,999.


Next Story