நோக்கியா சி 12 புரோ


நோக்கியா சி 12 புரோ
x

நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தற்போது சி 12 புரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இளம் பச்சை, சார்கோல் கருப்பு மற்றும் சியான் வண்ணங்களில் கிடைக்கும். 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. 5 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலும் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.6,999 முதல் ஆரம்பமாகிறது.

இதில் ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது. இதன் திரை 6.3 அங்குலம் கொண்டது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது.


Next Story