நோக்கியா செல்போன்
வயதானவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய வசதியாக புதிதாக இரண்டு மாடல் செல்போன்களை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 105 மற்றும் நோக்கியா 106 என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. யு.பி.ஐ 123 பே மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி உள்ளது. இதன் மூலம் வயதானவர்களும், ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் டிஜிட்டல் பண பரிவர்த் தனையை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.வி.ஆர். அழைப்புகள், செயலி பயன்பாடு, அழைப்பு மூலமான பரிவர்த்தனை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. 106 மாடலில் 1,450 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 105 மாடலில் 1,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. வயர்லெஸ் பண்பலை வானொலி கேட்கும் வசதி உள்ளது. ஹெட்போன் இல்லாமலேயே பாடல்களை கேட்டு ரசிக்க முடியும்.
106 மாடலில் உள்ளீடாக எம்.பி 3. பிளேயர் உள்ளது. 105 மாடலின் விலை சுமார் ரூ.1,299. 106 மாடலின் விலை சுமார் ரூ.2,199.