நத்திங் ஏர் 2 இயர்போன்


நத்திங் ஏர் 2 இயர்போன்
x
தினத்தந்தி 6 April 2023 3:45 PM GMT (Updated: 6 April 2023 3:45 PM GMT)

நத்திங் நிறுவனம் ஏர் 2 என்ற பெயரில் வயர்லெஸ் இயர் போனை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 40 டெசிபல் வரை இரைச்சலை குறைக்கும் நுட்பம் உள்ளது. சுற்றுப்புற இரைச்சலை முழுமையாகத் தவிர்த்து விடும். தூசி, நீர் புகாத தன்மை உடையது. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 8 மணி நேரம் வரை செயல் படும். இதன் எடை 4.5 கிராம்.

இதில் 33 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.9,999.


Next Story