நத்திங் போன் 2


நத்திங் போன் 2
x

லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் சென்னையில் உற்பத்தி ஆலையைத் தொடங்கி முதலாவதாக நத்திங் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முதல் தலைமுறையைச் சேர்ந்த 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.44,999. வாடிக்கையாளர்கள் விரும்பினால் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல்க தேர்வு செய்து கொள்ளலாம். 8-வது தலைமுறையைச் சேர்ந்த ஸ்நாப்டிராகன் பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், 6.71 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும், இரண்டு சிம் கார்டு போடும் வசதியும், திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சாரும் உள்ளது. 4,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 15 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் மாடல் விலை சுமார் ரூ.49,999.

12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் மாடல் விலை சுமார் ரூ.54,999.


Next Story