ஓப்போ ஏ 38


ஓப்போ ஏ 38
x

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 38 மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ள இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா, பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார், 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் பேட்டரி கொண்டது. விரைவாக சார்ஜ் ஆக 33 வாட் சூப்பர் வூக் சார்ஜரும் இத்துடன் அளிக்கப் படுகிறது. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி, இரண்டு சிம் கார்டு வசதியும் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.12,999.


Next Story