ஓப்போ ஏ 78 ஸ்மார்ட்போன் அறிமுகம்


ஓப்போ ஏ 78 ஸ்மார்ட்போன் அறிமுகம்
x

ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 78 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6.43 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் அட்ரினோ 610 ஜி.பி.யு. பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

பின்புறம் 50 மெகாபிக்ஸெல் கேமரா, முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமரா கொண்ட இதில் புளூடூத் 5.0 இணைப்பு வசதியும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. எலுமிச்சை பச்சை, கருப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.17,499.


Next Story