ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்


ரெட்மி 12 ஸ்மார்ட்போன் அறிமுகம்
x

ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி தற்போது ரெட்மி 12 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.இது 6.79 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி., 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது.

இதில் இரண்டு சிம்கார்டு போடும் வசதி, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் இடம் பெற்றுள்ளது. பக்க வாட்டுப் பகுதியில் விரல்ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம், சில்வர் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.12,210.


Next Story