ஜெப் மேக்ஸ் நின்ஜா 200 கீ போர்டு


ஜெப் மேக்ஸ் நின்ஜா 200 கீ போர்டு
x

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக ஜெப் மேக்ஸ் நின்ஜா 200 என்ற பெயரிலான கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.

வண்ண விளக்குகளால் ஒளிரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது. ஒரே சமயத்தில் மூன்று மின்னணு சாதனங்களை புளூடூத் மூலம் இணைத்து செயல்படுத்த முடியும். விண்டோஸ், மேக், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் மின்னணு சாதனங்களில் இதைப் பயன்படுத்த முடியும். 84 பொத்தான்களைக் கொண்டது. உள்ளீடாக ரீசார்ஜ் பேட்டரியைக் கொண்டது. இதன் எடை 615 கிராம் மட்டுமே. இதன் விலை சுமார் ரூ.4,499.

1 More update

Next Story