ஆகஸ்டு மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்


August month Raasipalan in Tamil
x
தினத்தந்தி 31 July 2024 4:33 PM IST (Updated: 31 July 2024 4:53 PM IST)
t-max-icont-min-icon

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஆகஸ்டு மாத பலன்களை பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் ஒரு மிடுக்கான பார்வையுடன் ஒரு அதிகாரம் நிறைந்த தோற்றத்துடன் உலா வருபவர்கள். அரசு ஆதரவு உங்களுக்கு உண்டு. தங்கள் ஆளுமையை தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமுடன் இருப்பவர்.

சிறப்புப் பலன்கள்

வேலைக்கு செல்பவர்களுக்கு உத்யோகத்தில் உயர்வு உண்டு. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நிலையில் கவனம் தேவை.

வியாபாரிகளுக்கு போட்டியாக இருந்து கொண்டு தொல்லை கொடுத்து வந்தவர்கள், இனி நம்மால் வீம்புக்கு இரையாக முடியாது என அவர்களாகவே முடிவெடுத்து, தங்கள் வியாபார நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்வார்கள்.

குடும்பத் தலைவிகள், அடகு வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள். கணவன் மனைவியிடையே சுமூகமான மனநிலை நிலவி குடும்ப முன்னேற்றத்திற்குப் பல திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். கை, கால்களில் வலி வந்து போகும்.

சின்னத்திரை மற்றும் சினிமா துறையில் உள்ள கலைஞர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. முன்பை விட கூடுதல் சம்பளத் தொகை வாங்குவீர்கள். உங்களுக்கென்று திரைப்படத் துறையில் தனி இடம் இருக்கும் என்பதை இந்த மாதம் உணருவீர்கள்.

மாணவர்களுக்கு இந்த மாத துவக்கத்திலேயே கல்வி காரகனான புதன் சாதகமாக இருப்பதால் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற இயலும். இருப்பினும் மாணவர்கள் பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: 3,9, 18

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

தவிர்க்க வேண்டிய கிழமைகள்: புதன், சனி

அதிர்ஷ்டக்கல் : பவளம்

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

தவிர்க்க வேண்டிய நிறங்கள்: பச்சை, நீலம்

பரிகாரம்

செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரத்தை 27 அல்லது 108 முறை சொல்லி வழிபடுவது நல்லது.

கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்

ஓம் பாலாரூபிணி வித்மஹே

பரமேஸ்வரி தீமஹி

தன்னோ கந்யா ப்ரசோதயாத்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள். அனைவரையும் கவர்ந்து விடும் ஆற்றல் பெற்றவர்கள். பேச்சால் எப்பேர்ப்பட்டவரையும் கவர்ந்து இழுப்பவர்கள். அதிகாரத்தால் யாராலும் விலைக்கு வாங்க முடியாதவர்கள். தாங்கள் விரும்பியரை ஒரு போதும் மறக்காதவர்கள். நினைவாற்றல் அதிகமிக்கவர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்களுக்கு தரவேண்டிய பாக்கித் தொகைகள் இந்த மாத ஆரம்பத்திலேயே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்கள் தங்களுக்கு அலைச்சல்கள் கூடி உடல் ஆரோக்கியம் குறைவு ஏற்படலாம். ஆதலால், உடல் நலத்தில் அக்கறைக் கொள்வது நல்லது. குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்துடன் சிறுபயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். விருந்து, விழா என கலந்து கொள்வீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் அதிகமான இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

கலைஞர்கள் தங்கள் சக கலைஞர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதில் அதிக கவனம் செலுத்துவது, உங்கள் வாய்ப்புகள் பறிபோகாமல் இருக்கப் பெரிதும் உதவும். மாணவர்கள் தாங்கள் மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. அப்பொழுதுதான் தேர்வின் போது தங்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற உதவியாக இருக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 15,17

அதிர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி, சனி

தவிர்க்க வேண்டிய கிழமைகள் : செவ்வாய, வியாழன்

அதிர்ஷ்டக்கல் : வைரம்

அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, பச்சை

தவிர்க்க வேண்டிய நிறங்கள் : மஞ்சள், சிவப்பு

பரிகாரம்

பெண்கள் வெள்ளிக் கிழமை அன்று அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு லலிதா சஹஸ்ர நாமத்தை சொல்லி வழிபடுவது மிகவும் நல்லது. வயது முதிர்ந்தவருக்குச் இயன்ற உதவிச் செய்யுங்கள். காகத்திற்கு உணவு வைத்து விட்டு சாப்பிடுவது மிக்க நன்று.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்கள் எப்போதும் கணக்கு பார்த்தே செயல்படுபவர்கள். நல்ல வாக்கு சாதுர்யம் மிக்கவர்கள். அனைவரிடமும் நன்கு பழகக் கூடியவர்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களுக்கு இயற்கையிலேயே உண்டு.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு தங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சக பணியாளர்கள் சுமூகமாகவும் பழகி வருவதன் மூலம் பணிகளில் எவ்வித குறைபாடும் ஏற்பட வாய்ப்பில்லை. பணவரவு திருப்தி கொடுக்கும். வியாபாரிகளுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். துணி வியாபாரம் மற்றும் பருத்தித் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உயரும். முதலீடுகளை அதிகம் போடுவர். சிறிது அலைச்சல்கள் உண்டு. குடும்பத் தலைவிகள் குடும்ப நிர்வாகத்தில் உங்கள் பொறுப்புகளைச் மிகச் சிறப்பாக நிறைவேற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி வீட்டினரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். கலைஞர்களுக்கு பொற்காலமாக அமையும். அனைத்து கிரகங்களும் தங்களுக்குச் சாதகமாக உள்ளதால் குறிப்பாக கலைக்குரிய சுக்கிரன் சாதகமாக இருப்பதால் உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள்.

மாணவர்கள், வகுப்பறையில் அநாவசியப் பேச்சை நிறுத்தி விடுவது தங்கள் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க உதவும். அதனால், நல்ல உள்வாங்கும் திறன் கூடி மனதில் பதியும். மதிப்பெண்கள் அதிகம் பெற இந்த செயல்பாடு உதவும்.

அதிர்ஷ்ட தேதிகள் : 5, 14,23

அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன், வெள்ளி

தவிர்க்க வேண்டிய கிழமைகள் : செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்டக்கல் : மரகதம்

அதிர்ஷ்ட நிறங்கள் : கரும்பச்சை, நீலம்

தவிர்க்க வேண்டிய நிறங்கள் : சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்

சனி காயத்ரி மந்திரம்

காகத் வஜாய வித்மஹே!

கட்க ஹஸ்தாய தீமஹி!!

தந்நோ மந்த ப்ரசோதயாத்!!

என்ற மந்திரத்தை சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிவரைக்குள் ஒன்பது முறை சொல்வதால் நன்மைகள் விளையும்.

கடகம்

கடக ராசி அன்பர்கள், வளமான நல்ல நினைவாற்றலை பெற்றவர்கள். பெண்களிடம் மிகுந்த இரக்கம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள். இனிக்க இனிக்க பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களை பொருத்தவரை, சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பையும் மதிப்பையும் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றைப் பெற்று இன்புறுவீர்கள்.

தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திந்துத் துயரில் ஆழ்ந்திருந்த வியாபாரிகளுக்கு, இப்போது இழந்த தொகை எல்லாம் திரும்பப் பெறுவதால் மனமகிழ்வார்கள். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறின்றி கவலைப்பட்டு வந்த பெண்களுக்கு கருத்தரிக்க அதிக வாய்ப்புண்டு. இக்காலக் கட்டத்தில் நல்ல மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ளலாம். நிச்சயம் பலனுண்டு. கலைஞர்களுக்கு திரைப்பட தொடர்பில் இருக்கும் வழக்கமாக உள்ள தொடர்புகள் தொடர்ந்து வரும் என்பதிலும் சந்தேகமில்லை. படத்திற்காக முன் பணம் கிடைக்கப் பெறும்.

படிப்புக்காக வெளிநாடு சென்று படிக்க ஆர்வமிக்க மாணவர்களுக்கு அதற்குண்டான பரிட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே ஸ்காலர்ஷிப்பை பெற இயலும். ஆதலால், இப்போதிருந்தே அடிக்கடி பயிற்சி செய்து கொள்வது நலம்.

அதிர்ஷ்ட தேதிகள் : 2, 20

அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், ஞாயிறு

தவிர்க்க வேண்டிய கிழமைகள் : சனி, புதன்

அதிர்ஷ்டக்கல் : முத்து

அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, சிவப்பு

தவிர்க்க வேண்டிய நிறங்கள் : நீலம், கருப்பு

பரிகாரம்

வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு விரதம் மேற்கொண்டு ராகு கால நேரத்தில் துர்கா அஷ்டகம் படித்து எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வருவது தங்கள் வாழ்வின் உயர் நிலைக்கு வர வழிவகுக்கும்.

மற்ற ராசிகளுக்கான பலன்களை அறிந்துகொள்ள.. https://www.dailythanthi.com/monthly-horoscope

கணித்தவர்: திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389


Next Story