செப்டம்பர் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்


September month Rasipalan in Tamil
x

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான செப்டம்பர் மாத பலன்களை பார்ப்போம்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே.. உங்களை மதிக்கும் இடத்தில் மட்டும் நீங்கள் அடிக்கடி காணப்படுபவர். நீங்கள் உங்களது சுயமரியாதையை என்றும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர்.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகதர்கள் அடிக்கடி தங்களுக்கு அலுவலக வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்ல உத்தரவு வரும். கவலை வேண்டாம் அவ்வாறு செல்வதன் மூலம் தங்களுக்கு பெரிய மனிதர்களின் தொடர்பும் அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரிகள் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனென்றால், பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டியது வரும். எனவே, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

குடும்பத் தலைவிகள் கைத்தொழிலான டைலரிங், அழகு நிலையங்கள்,பொம்மை தொழில் போன்ற சுயதொழிலை ஆரம்பித்து லாபத்தை ஈட்டுவீர்கள். மாமியார் மருமகள் உறவுகளில் பிரச்சினை ஏற்படும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.

கலைஞர்கள் தங்கள் உழைப்பினை போட்டால் தாங்கள் அதற்கேற்ற பலன் தாமதமானாலும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லாமல் செயல்படவும் வெற்றி உங்கள் பக்கம்தான்.

மாணவர்களுக்கு, கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது சகமாணவர்களுடன் சுற்றுலா செல்லும் போது படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்

ராகு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே.. எதிர்பார்த்து ஏமாறுவதை காட்டிலும் எதிர்பார்க்காமல் இருப்பது மிகக் நன்று என்று உணர்ந்தவர்.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பையும் மதிப்பையும் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் பக்கம் இருந்து அனைத்துவிதத்திலும் தங்களுக்கு உதவியாக இருப்பார்,

வியாபாரிகள், கல், மண் மற்றும் இரும்பு வியாபாரிகள் தாங்கள் அதிகமான விற்பனைகளை செய்து நல்ல பணவரவு கிடைக்கும். ஒரு சிலர் பெரிய வீடு என கட்டத்துவங்குவீர்கள்.

குடும்பத் தலைவிகள் கணவரின் அன்பைப் பரிபூரணமாகப் பெற்று மனமகிழ்வு கொள்வீர்கள். வீட்டினை கலைப் பொருட்களை கொண்டு அலங்கரிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வீர்கள்.

புதுமுகக் கலைஞர்களுக்கு தங்களது திறமையினை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். சோர்வு வேண்டாம்.

மாணவர்கள் தாங்கள் தங்களின் வகுப்பு மாணவர்களுடன் கைகலப்பு உண்டாக்காமல் அதாவது வம்பு, வழக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வுடன் பழகி வர முயலுவது தங்களது அது உங்கள் பெற்றோரின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

பரிகாரம்

மஹா லட்சுமி தாயாருக்கு மாலை வேளையில் நெய்விளக்கு ஏற்றவும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே.. யாராக இருந்தாலும் அனைவரையும் ஒன்றுபோல் பாவித்து பழகுபவர் நீங்கள். வேற்றுமை காட்டுவது என்பது உங்களுக்கு பிடிக்காத ஒன்று.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு, வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்கள் வேலைச்சுமை அதிகரித்தாலும் தங்களுக்கு பெரிய பொறுப்பைப் பெற்று பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றையும் பெறுவீர்கள்.

வியாபாரிகள் கலைத்துறையில் இல்லாமல் தங்களை தயாரிப்பாளராக்க பலர் முயற்சிப்பர். தயவுசெய்து சினிமா முன்அனுபவம் இன்றி முதல் போடுவதை தவிர்ப்பது நல்லது. தெரிந்த தொழிலை செய்யுங்கள். இதனால் நஷ்டத்தை தவிர்க்க இயலும்.

குடும்பத் தலைவிகளின் நீண்டகால கனவான தங்கள் காலிமளையில் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குடும்ப நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவ நாகரிகப் பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள்.

கலைஞர்கள் தங்கள் சக நடிகர்களுடன் பழகும் போது தங்களது பிரச்சினைகளை சொல்லாமல் இருப்பது நல்லது. தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கவும்.

மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காக அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக படித்தால்தான் இலக்கை அடைய முடியும்.

பரிகாரம்

அம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே.. கலைகளில் நாட்டம் மிகுந்தவர்கள் நீங்கள். எதிலும் உங்கள் ரசனை பளிச்சிடும்.

சிறப்புப்பலன்கள்:

உத்யோகஸ்தர்களுக்கு நேரடியாக மேலதிகாரி உங்களுக்கு உதவாதவாறு இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு மறைமுகமாக தங்களுக்கு ஆதரவு அளிப்பார்.

வியாபாரிகள் தங்களை சிறு தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். கவலை வேண்டாம். அதற்குண்டான முயற்சியில் ஈடுபடுங்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு பணம் தேவைக்கேற்ப கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும். உறவினர், விருந்தினர் வருகை ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் கனவு பலிக்கும்.

கலைஞர்கள் வெளியூர் பயணங்கள் அடிக்கடி லொகேஷன் பார்ப்பதற்கும் மற்றும் சொந்த ஊருக்கு செல்வதும் இருக்கும். அந்த அலைச்சல் வீண்போகாது.

மாணவர்கள் நீச்சல், டென்னிஸ் மற்றும் மற்ற விளையாட்டுத் துறையில் சேர்ந்து பயிற்சி பெற நினைப்பர். அது உங்களது எதிர்காலத்திற்கு நன்கு பயன்படி இருக்கும்.

பரிகாரம்

குருபகவானுக்கு வியாழக்கிழமை அன்று வணங்குவது நல்லது.

மற்ற ராசிகளுக்கான பலன்களை அறிந்துகொள்ள.. https://www.dailythanthi.com/monthly-horoscope


Next Story