'தக் லைப்' படத்தை இணையத்தில் வெளியிட தடை


Ban on online release of Thug Life film
x
தினத்தந்தி 4 Jun 2025 10:56 AM IST (Updated: 4 Jun 2025 12:55 PM IST)
t-max-icont-min-icon

'தக் லைப்' படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

'தக் லைப்' படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை இப்போது வெளியிடவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியைத் தள்ளி வைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஒரு வார கால அவகாசம் தேவை என்றும் கமல் தரப்பினர் கேட்டனர்.

கர்நாடகாவில் படம் வெளியாகாவிட்டால், வருவாயில் 7 சதவீதம் இழப்பு ஏற்படும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்நிலையில், 'தக் லைப்' படத்தை இணையத்தில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 'தக் லைப்' இணைய தளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'தக் லைப்' பட தயாரிப்பு நிறுவனம் தொடந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story