தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.7,930-க்கு விற்பனை


தங்கம் விலை புதிய உச்சம்:  ஒரு கிராம் ரூ.7,930-க்கு விற்பனை
x
தினத்தந்தி 6 Feb 2025 9:46 AM IST (Updated: 6 Feb 2025 9:58 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை,

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தினமும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கு விற்பனையானது. மேலும், கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,160 அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.7930-க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு ரூ.63,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது நகை மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story