ஜனாதிபதியுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு

ஜனாதிபதியை முப்படை தளபதிகள் சந்தித்த புகைப்படத்தை ஜனாதிபதி மாளிகை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
புதுடெல்லி,
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், ராணுவப் படைத் தலைவர் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் தினேஷ் கே. திரிபாதி ஆகியோர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் பற்றியும் இந்தியா - பாகிஸ்தான் தற்போதைய நிலை பற்றியும் விளக்கமளித்தனர். அப்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் திரவுபதி முர்மு பாராட்டியதாக ஜனாதிபதி மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story






