அதிரடி உயர்வு.. ரூ.11 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்.! இல்லத்தரசிகள் அதிர்ச்சி


அதிரடி உயர்வு.. ரூ.11 ஆயிரத்தை கடந்த ஒரு கிராம் தங்கம்.! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலையை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

சென்னை,

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அதிலும் ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது.

இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கமானது இன்றும் வழக்கம் போல தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. ஆம்.! ஏற்கெனவே ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலையை கண்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

நேற்று முன் தினம் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்

இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,060-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளிவிலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

06.10.2025 ஒரு சவரன் ரூ.88,480 (இன்று)

05.10.2025 ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று)

04.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

03.10.2025 ஒரு சவரன் ரூ.87,200

02.10.2025 ஒரு சவரன் ரூ.87,600

1 More update

Next Story