ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?

விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது.
இதற்கிடையில் நேற்று தங்கம் விலை 2 முறை அதிகரித்தது. காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மிண்டும் மாலை அதிகரித்தது, அதன்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் 86,160க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் 10,770க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று (30-09-2025) ரூ.90 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.161-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
30.09.2025 ஒரு சவரன் ரூ.86,880 (இன்று)
29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160
27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120
26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400
25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080






