மீண்டும் 74 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 23-ம் தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75,040க்கு விற்பனையானது. அதன் பிறகு மறுநாளில் இருந்தே தங்கம் விலை குறைய தொடங்கியது. 24-ம் தேதி பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,040க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து விலை குறைந்து வந்தது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.73,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.9,150க்கு விற்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்;
அதன்படி, ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 1,23,000 ஆகவும், ஒரு கிராம்123-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமெரிக்கா - ரஷியா இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்;
02.08.2025 ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 ஒரு சவரன் ரூ.73,680
29.07.2025 ஒரு சவரன் ரூ.73,200






