அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை


அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
x
தினத்தந்தி 29 Sept 2025 5:27 PM IST (Updated: 29 Sept 2025 5:40 PM IST)
t-max-icont-min-icon

இன்று காலை சவரனுக்கு ரூ. 480 அதிகரித்த நிலையில், மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

சென்னை,

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை

தங்கம் விலை கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால் கடந்த 26-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது.

அதை தொடர்ந்து, நேற்று முன்தினமும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இந்நிலையில், தங்கம் விலை இன்று காலை (29-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஒரே நாளில் 2-வது முறையாக மீண்டும் தங்கம் விலை அதிகரித்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் 86,160க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் 10,770க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மட்டும் சவரனுக்கு 1,040ம், கிராமுக்கு ரூ.130ம் அதிகரித்துள்ளது. அதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.

உலக நாடுகளிடையே போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குழப்பமான முடிவுகள் போன்றவற்றால் பல்வேறு நாடுகள் தங்கத்தில் மீது முதலீடு செய்துள்ளன. இதனால் தங்கத்தில் மீதான தேவை அதிகரித்துள்ளதால், விலை அதிகரித்து வருவதாக ஒரு தரப்பினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160 (இன்று மாலை)

29.09.2025 ஒரு சவரன் ரூ.85,600 (இன்று காலை)

27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120

26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400

25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080

24.09.2025 ஒரு சவரன் ரூ.84,௮௦௦

1 More update

Next Story