உலக முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்த ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் 21-வது இடத்தை பிடித்துள்ளது.
மும்பை,
ஆசியாவின் பெரும் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு, எண்ணைய் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தொழில் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பிரபல புளூம்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கைபடி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் 21-வது இடத்தை பிடித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் ரூ.10 லட்சத்து 73 ஆயிரம் கோடி (118 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என கணக்கீடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பெரு நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆல்பபெட் (கூகுளின் தாய் நிறுவனம்), சவுதி அராம்கோ உள்ளிட்ட பெருநிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.






