பங்கு சந்தைகள் 4-வது நாளாக கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 780 புள்ளிகள் சரிவு

வெனிசுலா-அமெரிக்க விவகாரம் தொடர்ச்சியாக எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்புடைய பங்குகள் வீழ்ச்சி கண்டன.
மும்பை,
இந்திய பங்கு சந்தைகள் இன்று மாலை நிறைவடையும்போது கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இவற்றில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 780.18 புள்ளிகள் சரிவடைந்து 84,189.92 புள்ளிகளாக நிறைவடைந்தது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 263.90 புள்ளிகள் சரிந்து 25,876.85 புள்ளிகளாக இருந்தது.
வெனிசுலா-அமெரிக்க விவகாரம் தொடர்ச்சியாக எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்புடைய பங்குகள் வீழ்ச்சி கண்டன. உலகளாவிய விலைகளில் ஏற்பட்ட சரிவால் உலோக துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்து இருந்தன.
அமெரிக்காவின் டிரம்ப் தலைமையிலான அரசு, இந்தியாவுக்கு, ஏற்கனவே விதித்த இறக்குமதி வரியுடன், எப்போது வேண்டுமென்றாலும் கூடுதல் வரிகளை விதிக்கலாம் என்ற அச்ச உணர்வு, அந்நிய முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுதல் போன்றவை முதலீட்டாளர்களுக்கு எதிர்மறையான எண்ணம் ஏற்படுத்தி உள்ளன.
இவை, தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பங்குகளின் வீழ்ச்சிக்கான காரணிகளாக, பங்கு சந்தை நிபுணர்களால் பார்க்கப்படுகின்றன. பங்கு சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக, நிறைவடையும்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.






