உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி;டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உச்சநீதிமன்றத்தில் வேலைக்கு சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள 241 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 241 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பிரிவில் 241 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.
கூடுதல் தகுதி: கம்ப்யூட்டர் பயிற்சி, நிமிடத்துக்கு 35 வார்த்தை தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-30 (8.3.2025ன் படி)
வயது தளர்வு:
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உள்ளது. உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு உச்ச வரம்பு கிடையாது. அரசு துறை ஊழியர்களுக்கு வயது வரம்பு தளர்வு கிடையாது.
சம்பள விவரம்:
உச்சநீதிமன்ற ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.35,400 ஆகும். இதர கொடுப்பனைகள், அகவிலைப்படி சேர்ந்து மாதம் ரூ.72,040 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 4 கட்ட தேர்வுமுறை இருக்கும். முதலில் கொள்குறி வகை எழுத்துத் தேர்வு (Objective Type Written Test) மற்றும் கணினி அறிவு தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தட்டச்சு தேர்வு மற்றும் விரிவாக விடை அளிக்கும் வகையில் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இறுதியாக காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலுார், திருச்சி, திருநெல்வேலி கன்னியாகுமரி.
விண்ணப்பிக்கும் முறை:
உச்சநீதிமன்ற ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பதவிக்கு https://www.sci.gov.in/recruitments/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினரு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்08.03.2025 இரவு 11.55 மணி வரை
தேர்வு தேதிபின்னர் அறிவிக்கப்படும்.
விவரங்களுக்கு: https://cdn3.digialm.com/EForms/configuredHtml/32912/92214/Index.html