டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு: வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தேர்வு கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. குரூப் 2 பணியிடங்களுக்கு 50 இடங்கள், குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் என மொத்தம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியானது.
சுமார் 5.53 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை தேர்வை 4.18 லட்சம் தேர்வர்கள் எழுதினர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி அடைவார்கள். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தேச விடைகளை தேர்வர்கள் பார்க்கலாம். இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள Answer Key Challenge என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இந்த தகவலை டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.






