புதிதாக 20 ஆயிரம்பேரை பணியமர்த்த காக்னிசன்ட் முடிவு

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் புதிதாக 20 ஆயிரம்பேரை பணியமர்த்த காக்னிசன்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை,
அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் ஏராளமான ஊழியர்களை கொண்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 500 குறைந்து, 3 லட்சத்து 36 ஆயிரத்து 300 ஆனது.
இருப்பினும், நடப்பாண்டில் புதிதாக 20 ஆயிரம்பேரை பணியமர்த்த காக்னிசன்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில், காக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய், முந்தைய இதே காலாண்டை விட 7.45 சதவீதம் அதிகரித்து, 510 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story






