கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு


கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு
x

கியூட் நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (கியூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான கியூட் (CUET) நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (மார்ச்) 13-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை தேர்வு நடத்தப்படுகிறது தேர்வுக்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story