இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்; பல்வேறு படிப்புகளும், விவரங்களும்... விரிவாக காணலாம்

கடல்சார் படிப்புகள், பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை மேம்படுத்த இந்த பல்கலைக்கழகம் மிகவும் உறுதுணையாக அமைகிறது.
இந்தியாவில் சுமார் 7,500 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. இந்த நீளமான கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும், 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் உள்ளன. இந்த துறைமுகங்களின்மூலம் இந்தியாவில் தொழில், வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்திய வணிகத்தில் சுமார் 65 சதவிகிதத்திற்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் இந்த துறைமுகங்கள் வாயிலாக தேவையான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் “இந்திய கடல்சார் போக்குவரத்து”(Indian Maritime) மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
2008-ம் ஆண்டு நவம்பர் 14-ம் நாள் சென்னையை தலைநகராக கொண்டு “இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்”(Indian Maritime University) தொடங்கப்பட்டது. கடல்சார் படிப்புகள், பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகள் ஆகியவற்றை மேம்படுத்த இந்த பல்கலைக்கழகம் மிகவும் உறுதுணையாக அமைகிறது.
மேலும், கடல் இயல் (Oceanography), கடல்சார் வரலாறு (Maritime History), கடல்சார் சட்டங்கள் (Maritime Laws), கடல்சார் பாதுகாப்பு (Maritime Security) மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு (Search and Rescue), ஆபத்தை விளைவிக்கும் வணிகப்பொருட்கள் போக்குவரத்து, சுற்றுச்சூழல் படிப்பு ஆகியவற்றை தெளிவாக கற்பிக்கும் விதத்தில் “இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்” (Indian Maritime University) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், இந்தியாவில் மொத்தம் 6 இடங்களில் இயங்கி வருகிறது. சென்னை, கொச்சி, கொல்கத்தா, மும்பை துறைமுகம், நவி மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக்கழக வளாகங்களில் பல்வேறு கடல்சார் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
பல்வேறு படிப்புகள்
இங்கு நடத்தப்படும் பல்வேறு படிப்புகள் பற்றிய விவரங்கள் வருமாறு:
பட்டப்படிப்புகள் (UG PROGRAMMES)
1.பி.டெக். மரைன் இன்ஜினியரிங் (B.Tech. - Marine Engineering)
இந்த படிப்பு 4 வருட படிப்பாகும். இந்த படிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை துறைமுகம் ஆகிய இடங்களிலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்படுகிறது.
2.பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஓசன் இன்ஜினியரிங் (B.Tech. Naval Architecture and Ocean Engineering)
இந்த படிப்பு 4 வருட படிப்பாகும். இந்த படிப்பு விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
3.பி.டெக். நேவல் ஆர்கிடெக்சர் அன்ட் ஷிப் பில்டிங் (B.Tech. Naval Architecture and Ship Building)
இந்த படிப்பு 4 வருட படிப்பாகும். இந்த படிப்பு விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
4.பி.எஸ்.சி. நாட்டிக்கல் சயின்ஸ் (B.Sc. (Nautical Science)
இந்த படிப்பு 3 வருட படிப்பாகும். இந்த படிப்பு சென்னை, கொச்சி, நவி மும்பை ஆகிய இடங்களிலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்படுகிறது.
5.பி.பி.ஏ. மாரிடைம் லாஜிஸ்டிக்ஸ் (BBA Maritime Logistics)
இந்த படிப்பு 3 வருட படிப்பாகும். இந்த படிப்பு விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
6.பி.பி.ஏ. லாஜிஸ்டிக்ஸ், ரீடைலிங் அன்ட் இ-காமர்ஸ் (BBA-Logistics, Retailing and E-Commerce)
இந்த படிப்பு 3 வருட படிப்பாகும். இந்த படிப்பு சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களிலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்படுகிறது.
பட்ட மேற்படிப்புகள் (POST GRADUATE PROGRAMMES)
1.எம்.பி.ஏ. இன்டர்நேசனல் டிரான்ஸ்போர்ட்டேசன் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் (MBA International Transportation and Logistics Management)
இந்த படிப்பு 2 வருட படிப்பாகும். இந்த படிப்பு சென்னை, கொச்சி, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்படுகிறது.
2.எம்.பி.ஏ. போர்ட் அன்ட் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட் (MBA Port and Shipping Management)
இந்த படிப்பு 2 வருட படிப்பாகும். இந்த படிப்பு சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களிலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்படுகிறது.
3.எம்.டெக். மரைன் டெக்னாலஜி (M.Tech. Marine Technology)
இந்த படிப்பு 2 வருட படிப்பாகும். இந்த படிப்பு கொல்கத்தாவிலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
4.எம்.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஓசன் இன்ஜினியரிங் (M.Tech. Naval Architecture and Ocean Engineering)
இந்த படிப்பு 2 வருட படிப்பாகும். இந்த படிப்பு விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
5.எம்.டெக். டிரெட்ஜிங் அன்ட் ஹார்பர் இன்ஜினியரிங் (M.Tech. Dredging and Harbour Engineering)
இந்த படிப்பு 2 வருட படிப்பாகும். இந்த படிப்பு விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
6.எம்.டெக். என்விரோன்மெண்டல் இன்ஜினியரிங் (M.Tech. Environmental Engineering)
இந்த படிப்பு 2 வருட படிப்பாகும். இந்த படிப்பு விசாகப்பட்டினத்திலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
7.எம்.பி.ஏ. போர்ட் அன்ட் ஷிப்பிங் லாஜிஸ்டிக்ஸ் (MBA Port and Shipping Logistics)
இது 2 வருட படிப்பாகும். குஜராத்திலுள்ள கதி சக்தி விஷ்வவித்யாலயா (Gati Shakti Vishwavidyalaya) மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் படிப்பாகும். முதலாம் ஆண்டில் கதி சக்தி விஷ்வவித்யாலயாவிலும், இரண்டாவது ஆண்டில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திலும் (Indian Maritime University) பயிற்சிகள் வழங்கப்படும்.
ஆராய்ச்சி படிப்புகள் (RESEARCH PROGRAMMES)
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.
1. Ph.D. (Full-time and Part - time)
2. Ph.D. (Integrated)
3. MS (By Research)
டிப்ளமோ படிப்புகள் (DIPLOMA PROGRAMMES)
1.டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் (Diploma in Nautical Science)
இந்த படிப்பு 1 வருட படிப்பாகும். இந்த படிப்பு சென்னை மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களிலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்படுகிறது.
2.போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மரைன் இன்ஜினியரிங் (Post Graduate Diploma in Marine Engineering)
இந்த படிப்பு 1 வருட படிப்பாகும். இந்த படிப்பு மும்பை துறைமுகத்திலுள்ள இந்திய கடற்சார் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்
1. ANGLO EASTERN MARITIME ACADEMY, MUMBAI
(a) DNS – Diploma in Nautical Science
2. COIMBATORE MARINE COLLEGE, COIMBATORE
(a) B.Tech. (Marine Engineering)
3. COLLEGE OF SHIP TECHNOLOGY, PALAKKAD
(a) BBA (Maritime Logistics) (Apprenticeship embedded)
4. DR.AMBEDKAR INSTITUTE OF TECHNOLOGY, ANDAMAN AND NICOBAR ISLANDS
(a) DNS – Diploma in Nautical Science
5. EURO TECH, COCHIN
(a) B.Tech. (Marine Engineering)
(b) DNS – Diploma in Nautical Science
(c) B.Sc., (Nautical Science)
(d) BBA (Maritime Logistics)
(e) MBA (International Transportation and Logistics Management)
6. THE GREAT EASTERN INSTITUTE OF MARITIME STUDIES, PUNE
(a) DNS - Diploma in Nautical Science
7. HINDUSTAN INSTITUTE OF MARITIME TRAINING, CHENNAI
(a) B.Sc. (Nautical Science)
(b) B.Tech. (Marine Engineering)
(c) DNS – Diploma in Nautical Science
(d) MBA (Port and Shipping Management)
(e) MBA (International Transportation and Logistics Management)
(f) BBA (Logistics, Retailing and E-commerce)
8. INTERNATIONAL MARITIME INSTITUTE, NEW DELHI
(a) B.Tech.(Marine Engineering)
(b) DNS-Diploma in Nautical Science
9. JEYANTHINATHER ACADEMY OF MARINE STUDIES, ARASOOR POOCHIKADU-628 653, NEAR THISAIYANVILLAI, TUTICORIN DISTRICT.
(a) B.Sc. (Nautical Science)
10. MARITIME TRAINING INSTITUTE (SCI), MUMBAI
(a) DNS – Diploma in Nautical Science
11. SAMUNDRA INSTITUTE OF MARITIME STUDIES, MUMBAI
(a) B.Tech. (Marine Engineering)
(b) DNS-Diploma in Nautical Science
12. SOUTHERN ACADEMY OF MARITIME STUDIES, CHENNAI
(a) DNS – Diploma in Nautical Science
13. SEVEN ISLANDS MARITIME FOUNDATION
(a) DNS – Diploma in Nautical Science
14. TRAINING SHIP RAHMAN, MUMBAI
(a) DNS – Diploma in Nautical Science
15. TOLANI MARITIME INSTITUTE, MUMBAI
(a) DNS – Diploma in Nautical Science
(b) B.Sc., (Nautical Science)
(c) B.Tech (Marine Engineering)
16. YAK EDUCATION TRUST, NAVI MUMBAI
(a) DNS – Diploma in Nautical Science
படிப்பில் சேருவதற்கான தகுதிகள்…
I.பி.டெக். மரைன் இன்ஜினியரிங் (B.Tech. Marine Engineering)
(1) பிளஸ் 2 தேர்வில் (இயற்பியல், வேதியியல், கணிதம்) ஆகிய பாடங்களில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆங்கில பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
(2) திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும்.
(3) ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு
பொதுப்பிரிவினர் - 25 வயது
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC-NCL) - 28 வயது
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் - 30 வயது
(4) பெண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு
பொதுப்பிரிவினர் - 27 வயது
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC-NCL) - 30 வயது
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் - 32 வயது
II.எம்.டெக். மரைன் இன்ஜினியரிங் (M.Tech. Marine Engineering)
(1) பி.இ. / பி.டெக். இன் மரைன் இன்ஜினியரிங் / மெக்கானிக்கல் இன்ஜினியரிங் / நேவல் ஆர்க்கிடெக்சர் ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: GATE தேர்வு எழுதி சிறந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் IMU-CET தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், IMU-CET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு கிடையாது.
நுழைவுத்தேர்வு
இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகளில் (B.Tech., M.E., B.Sc., (NS) and DNS) சேர “காமன் என்டரன்ஸ் டெஸ்ட்” (Common Entrance Test) (IMU-CET) என்னும் நுழைவுத்தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும். நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு…
இங்கு நடத்தப்படும் படிப்புகள் பற்றிய மேலும் சில விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி….
INDIAN MARITIME UNIVERSITY
East Coast Road,
Semmencherry,
Chennai – 600 119.
+91 (44) 2453 9027/9028
www.imu.edu.in






