வெளிநாட்டில் வேலை பார்க்க ஆசையா?.. மாதம் ரூ1.25 லட்சம் சம்பளம்- கலை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

தகுதியும், கலைத் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வெளிநாடுகளில் கலை ஆசிரியர்களுக்கான தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிப்பினை தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்: கிராமிய நடன ஆசிரியர்கள்,பரதநாட்டிய ஆசிரியர்கள்
காலியிடம் உள்ள நாடுகள்:
மியான்மர், ரீயூனியன், இந்தோனேசியா, சீஷெல்ஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு, மலாவி, மொரிஷீயஸ், உகாண்டா
தகுதிகள்: ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தகுதியும், கலைத் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
பணிக்காலம்: தமிழ் சங்கங்களில் பகுதி நேர கலைப்பயிற்சி வழங்க ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு கலையாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க: https://artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள் : 31.12.2025 (மாலை 5.00 மணிக்குள்)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகம், இராஜா அண்ணாமலைபுரம், - 600 028.






