கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிறுத்தி வைப்பு


கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிறுத்தி வைப்பு
x

கோப்பு படம்

தினத்தந்தி 21 Sept 2025 11:49 AM IST (Updated: 21 Sept 2025 11:50 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் 20-ந்தேதி, 22-ந்தேதி, 23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற இருந்தது.

இந்த நேர்காணல் அரசிடமிருந்து வயது நிர்ணயம் செய்வது தொடர்பான புதிய அறிவுரைகள் பெறப்பட்டுள்ள காரணங்களுக்காக, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மீண்டும் திருத்தப்பட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்து, பணி நியமனம் தொடர்பான நடைமுறைகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் உள்ளிட்ட சில வட்டங்களில் திறன் தேர்வு (சைக்கிள் ஓட்டும் திறன்) மற்றும் நேர்முகத்தேர்வு முடிந்த நிலையில், திடீரென வெளியான இந்த அறிவிப்பு தேர்வர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

1 More update

Next Story