பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்: மத்திய அரசு வேலை.. அருமையான வாய்ப்பு


பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்:  மத்திய அரசு வேலை.. அருமையான வாய்ப்பு
x

image courtesy:PTI

தினத்தந்தி 29 Jun 2025 1:01 PM IST (Updated: 29 Jun 2025 3:49 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எம்.டி.எஸ், ஹவில்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம், எஸ்.எஸ்.எஸ்.சி பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட எம்.டி.எஸ், ஹவில்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம் : எம்.டி.எஸ், ஹவில்தார்- 1,175 காலிப்பணியிடங்கள்

கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10-ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு : எம்.டி.எ ஸ் பணிக்கு 18-25 வயது வரையும், ஹவில்தார் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 19,900 முதல் ரூ.63,200 வரை

தேர்வு முறை : கணிணி வழியில் தேர்வு நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.100 ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.07.2025

தேர்வு நடைபெறும் நாள் : 20 செப்டம்பர் முதல் 24 அக்டோபருக்குள் நடைபெறும்

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://ssc.gov.in/

1 More update

Next Story