எஸ்பிஐ வங்கியில் வேலை.. மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்! யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பக்கலாம்.
நாட்டின் முன்னாணி பொதுத்துறை வங்கியாக உள்ள எஸ்பிஐ வங்கியில் காலியாக 59 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்:
மேலாளர் ( புராடெக்ட்ஸ்- டிஜிட்டல் தளங்கள்) - 34
துணை மேலாளர் (புராடெக்ட்ஸ்- டிஜிட்டல் தளங்கள்) - 25
கல்வி தகுதி: பிஇ/பிடெக் அல்லது எம்.சி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு: 02.10.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 28 வயதும் அதிகபட்சம் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
சம்பளம்: ரூ.85,920 முதல் 1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://recruitment.bank.sbi/crpd-sco-2025-26-10/apply






