வங்கியில் வேலை.. 514 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வங்கியில் 514 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கியில் வேலை.. 514 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Published on

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் இந்தியா உள்ளது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் 514 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யார் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் வருமாறு: -

பணி நிறுவனம்: பேங்க் ஆப் இந்தியா

காலி பணி இடங்கள்: 514

பதவி பெயர்: கிரெடிட் ஆபீசர்

கல்வி தகுதி: பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1-11-2025 அன்றைய தேதிப்படி 25 முதல் 35 வயது, 28 வயது முதல் 38 வயது, 30 வயது முதல் 40 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்

தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-1-2026

இணையதள முகவரி: https://bankofindia.bank.in/career/recruitment-notice

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com