ரெயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை; 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் ரெயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர், டிக்கெட் கிளர்க், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவும் தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:
பணியிடங்கள்:
டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரெயில் மேலாளர், ஜூனியர் அக்கவுண்ட் அஸிஸ்டண்ட், டைப்பிஸ்ட், சீனியர் கிளர்க் டைப்பிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 5,810 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான இரண்டு கட்ட தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 21.10.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.11.2025
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம்: ரூ. 500 ஆகும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






