வங்கிகளில் வேலை: 5,208 காலிப்பணியிடங்கள்: ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு


வங்கிகளில் வேலை: 5,208 காலிப்பணியிடங்கள்: ஐபிபிஎஸ் வெளியிட்ட  அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2025 7:45 PM IST (Updated: 1 July 2025 7:45 PM IST)
t-max-icont-min-icon

வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையமான ஐபிபிஎஸ் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையமான ஐபிபிஎஸ் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

பாங்க் ஆப் பரோடா - 1000

பாங்க் ஆப் இந்தியா - 700

பாங்க் ஆப் மகாராஷ்டிரா - 1000

கனரா வங்கி - 1000

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா (சிபிஐ) - 500

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 450

பஞ்சாப் நேஷனல் வங்கி - 200

பஞ்சாப் & சிந்து வங்கி - 358

என மொத்தம் 5,208 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. புரொபேஷனரி அதிகாரி/ மேனேஜ்மேண்ட் டிரெய்னி பதவிகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி : ஏதாவது ஒரு டிகிரி :

வயது வரம்பு : 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

சம்பளம் எவ்வளவு : ரூ.48480 – 85920/- வரை

தேர்வு முறை : முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.650, எஸ்.சி.எஸ்.டி பிரிவினருக்கு ரூ.175

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.07.2025

1 More update

Next Story