தொடக்க கல்வி பட்டயத்தேர்வு: தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு


தொடக்க கல்வி பட்டயத்தேர்வு: தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு
x

தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கான தனித் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.

சென்னை,

தொடக்க கல்வி பட்டயத்தேர்வு அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் நடத்தப்படுகிறது. அந்தவகையில் முதலாம் ஆண்டு தேர்வுகள் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு தேர்வுகள் ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு, விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வர்கள், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை பதிவிட்டு, தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story