பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் வேலை: தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை

பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் காலியாக உள்ள 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை,
பிரபல பொதுத்துறை வங்கியான பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் காலியாக உள்ள 750 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 85 பணியிடங்கள் உள்ளன. உள்ளூர் மொழித்திறன் தெரிந்தால் மட்டுமே இந்த பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணி நிறுவனம்: பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
பணி இடங்கள்: 750 (இதில் தமிழ்நாடு-85, மராட்டியம்-100, கர்நாடகா-65, புதுச்சேரி-5)
பதவி: உள்ளூர் வங்கி அதிகாரிகள்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது: 4-9-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது: 20; அதிகபட்ச வயது: 30. 2-8-1995-க்கு முன்போ, 1-8-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள் உள்பட
தேர்வு முறை: எழுத்து தேர்வு, மெரிட் லிஸ்ட், உள்ளூர் மொழிப்புலமை, நேர்காணல்
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-9-2025
இணையதள முகவரி: https://punjabandsindbank.co.in/content/recruitment






