ரெயில்வேயில் வேலை: 368 காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


ரெயில்வேயில் வேலை:  368 காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
x

இந்திய ரெயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்திய ரெயில்வே துறையில் காலியாக உள்ள ஸ்டேஷன் கன்ட்ரோலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

பணி: 'ஸ்டேஷன் கன்ட்ரோலர்' பிரிவில் 368 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.

வயது: 20-33 (14.10.2025ன் படி), அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

சம்பளம்; மாதம் ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளமாக கிடைக்கும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். ரூ. 500 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.400 திருப்பி தரப்படும்.

கடைசிநாள்: 14.10.2025

கூடுதல் விவரங்களுக்கு: rrbchennai.gov.in

1 More update

Next Story