மாநில தகுதித் தேர்வு (செட்) தேதிகள் அறிவிப்பு


மாநில தகுதித் தேர்வு (செட்) தேதிகள் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 14 Feb 2025 3:17 PM IST (Updated: 14 Feb 2025 3:34 PM IST)
t-max-icont-min-icon

மாநில தகுதித் தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது.

சென்னை,

தமிழக பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய செட் தேர்வு எழுதுவது கட்டாயமாகும். இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மாநில தகுதித் தேர்வு (செட்) வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மாநில தகுதித் தேர்வினை (செட்) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்திட அரசு ஆணையிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, மாநில தகுதித் தேர்வினை வருகின்ற மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி வாயிலாக நடத்த தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில், தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்னர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story