மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க 25-ந்தேதி கடைசி நாள்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னை,
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான (2025-26) மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்பில் சேர இதுவரையில் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் வரும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்து இருக்கிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) ஆகும். மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பும் இல்லை என சொல்லப்படுகிறது. எனவே அதற்கு அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story






