நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடக்கம்


நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு தொடக்கம்
x

Image Courtesy : PTI

தினத்தந்தி 25 May 2025 9:59 AM IST (Updated: 25 May 2025 10:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 69 மையங்களில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது.

புதுடெல்லி,

மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் கடந்த 13-ந்தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று பல்வேறு தேர்வு மையங்களில் எழுத்து முறையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில் 69 மையங்களில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 24,364 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1 More update

Next Story