உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள்..எங்கெல்லாம் படிக்கலாம்?


உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள்..எங்கெல்லாம் படிக்கலாம்?
x
தினத்தந்தி 10 Jun 2025 6:24 AM IST (Updated: 10 Jun 2025 6:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலுள்ள சில முக்கிய கல்வி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் இந்த படிப்பை வழங்குகின்றன.

உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. உணவு சம்பந்தப்பட்ட பொருட்களை பாதுகாக்கவும், சத்தான உணவாக அதனை மாற்றவும் பலவிதமான உணவுகளை தயாரிக்கவும், அதனை நீண்டநாள் பாதுகாக்கவும் உதவும் வகையில் உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பங்கள் நாள்தோறும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

Food Science Fundamentals, Food Processing Techniques, Quality Control and Assurance, Food Packaging, Research and Development ஆகிய முக்கியமான பிரிவுகளில் இந்தப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இதனால், Food Science, Chemistry, Microbiology, Engineering, Quality Control, Packaging ஆகிய பாடங்கள் இந்த படிப்பில் இடம்பெறுகிறது.

உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை நான்கு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை -

1.சான்றிதழ் படிப்புகள் (Certificate Courses)

2.டிப்ளமோ படிப்புகள் (Diploma Courses)

3.பட்டப்படிப்புகள் (Degree Courses - B.Sc. or B.Tech)

4.பட்டமேற்படிப்புகள் (Post Graduate Courses – M.Sc., or Ph.D.,)

-ஆகியவை ஆகும்.

உணவுப்பதப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப படிப்பை படித்தவர்களுக்கு பல்வேறு வகையான பதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக -

v Food Technologists,

v Quality Control Analyst,

v Food Engineer,

v Food Microbiologist,

v Food Inspector,

v Food Safety Specialists,

v Research Scientist

- ஆகிய பதவிகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்திலுள்ள சில முக்கிய கல்வி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் பி.டெக் மற்றும் எம்.டெக். படிப்பை Food Technology, Diary Technology ஆகியவற்றில் வழங்குகின்றன.

குறிப்பாக -

S.No Institutions Courses

1. Tamil Nadu Agricultural University (TNAU) B.Tech in Food Technology and Diary Technology M.Tech and B.Tech

2. Tamil Nadu Dr.J.Jayalalitha Fisheries University (TNJFU) B.Tech in Food Technology (College of Fish Nutrition and Food Technology

3. SRM Institute of Science and Technology B.Tech. in Food Processing

4. Kalasalingam Academy of Research and Education, B.Tech. M.Tech and Ph.D.

5. Anna University B.Tech. in Food Processing

6. Karunya Institute of Technology and Sciences B.Tech and M.Tech Programmes

7. Rajalakshmi Engineering College B.Tech in Food Technology

8. Indian Institute of Food Processing Technology (IIFPT) B.E., / B.Tech, and M.E., / M.Tech. in Food Technology

9. National Institute of Food Technology, Entrepreneurship and Management (NIFTEM-T) B.Tech / M.Tech and Ph.D in Food Processing and Technology

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட்

மத்திய அரசு தமிழகத்தில் தஞ்சாவூரில் தொடங்கி நடத்திவரும் உணவு சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கான கல்வி நிறுவனமாக "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி, ஆன்டிரப்பிரநியூர்ஷிப் அண்ட் மேனேஜ்மென்ட் (NATIONAL INSTITUTE OF FOOD TECHNOLOGY, ENTREPRENEURSHIP AND MANAGAGEMENT) என்னும் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது.

தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனம் உணவு தொழில்நுட்பம்,தொழில் முனைவோர் இயல் மற்றும் உணவு வியாபார மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் படிப்புகளை உருவாக்கி, நடத்தி வருகிறது.

இவைதவிர, மீன். இறைச்சி மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை பதப்படுத்தவும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூரில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் ரயில்வே நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது

நிறுவனம் வழங்கும் படிப்புகள்

இங்கு நடத்தப்படும் படிப்புகள் விபரம்:

• B.Tech. (FOOD TECHNOLOGY)

• M.Tech. (FOOD PROCESS ENGINEERING)

• M.Tech. (FOOD SCIENCE AND TECHNOLOGY)

• M.Tech. (FOOD SAFETY AND QUALITY ASSURANCE)

• Ph.D. (FOOD PROCESS ENGINEERING)

• Ph.D. (FOOD SCIENCE AND TECHNOLOGY)

கல்வி நிறுவனத்திலுள்ள துறைகள்

இங்குள்ள சில முக்கியமான துறைகள்-

· FOOD ENGINEERING

· FOOD PACKAGING AND SYSTEM DEVELOPMENT

· FOOD PRODUCT DEVELOPMENT

· FOOD SAFETY AND QUALITY TESTING

· FOOD BIOTECHNOLOGY

· PRIMARY PROCESSING, STORAGE AND HANDLING

· COMPUTATIONAL MODELING AND NANOSCALE PROCESSING UNIT

· TECHNOLOGY DISSEMINATION

· FOOD PROCESSING BUSINEESS INCUBATION CENTRE

· WORKSHOP AND FABRICATION UNIT

· ACADEMICS AND HUMAN RESOURCE DEVELOPMENT

· CENTRE FOR EXCELLENCE IN GRAIN SCIENCE

· CENTRE FOR EXCELLENCE IN NONTHERMAL PROCESSING

· SCHOOL OF SENSORY SCIENCE

· CENTRAL INSTRUMENTATION FACILITY

· INDUSTRY ACADEMIA CELL

· COMPUTER CENTRE

· PLANNING AND MONITORING CELL

· ADMINISTRATIVE OFFICE

· SUPPORTING UNIT

கல்வி நிறுவனம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.

(MEMORANDUM OF UNDERSTANDING - MOU)

இந்தக் கல்வி நிறுவனம் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினாலும் மிகச்சிறந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வசதியாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன அவற்றுள் சில-

· MS SWAMINATHAN RESEARCH FOUNDATION, CHENNAI.

· NIT, TRICHY.

· VIT, VELLORE.

· CENTRAL ELECTRONICS ENGINEERING RESEARCH INSTITUTE, RAJASTHAN.

· CENTRAL RAILSIDE WAREHOUSE CO. LTD., NEW DELHI.

· ICAR-CTCRI, THIRUVANANTHAPURAM.

· GANDHIGRAM RURAL INSTITUTE, DINDIGUL.

· JAWAHARLAL NEHRU TECHNOLOGICAL UNIVERSITY, KAKINADA.

· CSIR- CFTRI, MYSORE.

· ENTREPRENEURSHIP DEVELOPMENT INSTITUTE OF INDIA, GUWAHATI, ASSAM.

· PUNJAB AGRICULTURAL UNIVERSITY.

· UNIVERSITY OF AGRICULTURAL SCIENCES, RAICHUR, KARNATAKA.

· MARATHWADA AGRICULTURAL UNIVERSITY, PARBHAN, MAHARASTRA

வெளிநாட்டு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களோடு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

• NATURAL RESOURCES INSTITUTE, GREENWICH, LONDON.

• KANSAS STATE UNIVERSITY, MANHATTAN.

• OKLAHOMA STATE UNIVERSITY, OKLAHOMA.

• KURURAY CO. LTD. TOKYO, JAPAN.

• ONIRIS FRANCE.

• AMBO UNIVERSITY, ETHIOPIA.

• ASIAN INSTITUTE OF TECHNOLOGY, THAILAND.

• AUBURN UNIVERSITY, USA.

• WAGENINGEN UNIVERSITY, NETHERLANDS.

• SASKATOON PULSE GROWERS, SASKATOON, CANADA.

• ILLINOIS INSTITUTE OF TECHNOLOGY CHICAGO, USA.

• COLORADO STATE UNIVERSITY, FORTCOLLINS, USA.

• MCGILL UNIVERSITY, MONTREAL, CANADA.

• UNIVERSITY OF SASKATCHEWAN, SASKATOON, CANADA.

• UNIVERSITY OF NEBRASKA, LINCOLN, USA.

• UNIVERSITY OF MANITOBA, WINNIPEG, CANADA.

மேலும் விவரங்களுக்கு…

இந்த கல்வி நிறுவனம் பற்றிய மேலும் பல விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :-

NATIONAL INSTITUTE OF FOOD TECHNOLOGY, ENTREPRENEURSHIP AND MANAGEMENT, THANJAVUR (NIFTEM-T)

Ministry of Food Processing Industries, Government of India,

Pudukkottai Road, Thanjavur - 613 005,

Tamil Nadu, India.

+91 4362 228155

niftem-t.ac.in



1 More update

Next Story