சத்தீஷ்கார்: 4 நக்சலைட்டுகள் கைது; 10 கிலோ வெடிமருந்து பறிமுதல்


சத்தீஷ்கார்: 4 நக்சலைட்டுகள் கைது; 10 கிலோ வெடிமருந்து பறிமுதல்
x
தினத்தந்தி 31 Aug 2025 4:15 AM IST (Updated: 31 Aug 2025 4:16 AM IST)
t-max-icont-min-icon

நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். அதேவேளை, நக்சலைட்டுகள் திருந்தி வாழ அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பயனாகவும் அரசின் முயற்சிகளாலும் நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் 4 நக்சலைட்டுகளை நேற்று பாதுகாப்புப்படையினர் கைது செய்தன. அதேபோல், பிஜாபூரில் நேற்று பாதுகாப்புப்படையினர் நடத்திய சோதனையில் 10 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story