10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - சக மாணவர் வெறிச்செயல்


10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை - சக மாணவர் வெறிச்செயல்
x

ராணுவ வீரரான தனது தாத்தாவின் துப்பாக்கியால் மாணவன் ஒருவன் தீக்‌ஷித்தை சுட்டான்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவன் தீக்ஷித் (வயது 15). அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கும், அவனுடன் படிக்கும் சக மாணவன் ஒருவனுக்கும் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கன்டோன்மென்ட் பகுதி ரெயில் பாதை அருகே அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தீக்ஷித்துடன் படித்த அந்த மாணவன், ராணுவ வீரரான தனது தாத்தாவின் துப்பாக்கியால் தீக்ஷித்தை சுட்டான். இதில் வயிற்றில் அவனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சிறுவன் தீக்ஷித்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவன் பரிதாபமாக இறந்தான். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனை சுட்டுக்கொன்ற சகமாணவனை தேடிவருகிறார்கள்.

1 More update

Next Story