இந்து மதத்திற்கு திரும்பிய 125 பழங்குடியின மக்கள்; கால்களை கழுவி வரவேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.

பழங்குடியின மக்கள் இந்து மதத்திற்கு திரும்ப மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக பாவனா போரா தெரிவித்துள்ளார்.
இந்து மதத்திற்கு திரும்பிய 125 பழங்குடியின மக்கள்; கால்களை கழுவி வரவேற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள நியூர் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றன. இதில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 125 பேர் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்களை இந்து மதத்திற்கு வரவேற்கும் வகையில், கர் வாபசி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பண்டாரியா தொகுதி பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பாவனா போரா கலந்து கொண்டார்.

இந்து மதத்திற்கு திரும்பிய பழங்குடியின மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாவனா, அவர்களின் கால்களை கழுவி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழங்குடியின மக்கள் இந்து மதத்திற்கு திரும்ப மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும், தங்கள் எதிர்கால சந்ததியினருக்கு பழங்குடி சமுதாயத்தின் வரலாறு, கலாசாரம் ஆகியவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள் தங்கள் பூர்வீக மதத்திற்கு திரும்ப வேண்டியது அவசியம் என்றும் பாவனா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com