சவுதி அரேபியா சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலி

சவுதி விபத்தில் ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரும் பலியான துயரம் நிகழ்ந்துள்ளது
சவுதி அரேபியா சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலி
Published on

மெக்கா, 

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் மதீனாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள முப்ரிஹாத் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததால், பஸ் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தபோது அவர்கள் தப்பிக்க முடியவில்லை. இதுவே அதிக உயிரிழப்புக்கு காரணம். பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலானது.மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் நடந்த துயரம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சவுதி விபத்தில் ஐதராபாத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேரும் பலியான துயரம் நிகழ்ந்துள்ளது. மூன்று தலைமுறைகளை சேர்ந்த 18 பேர் மெக்காவிற்கு சென்றுவிட்டு வரும் சனிக்கிழமை நாடு திரும்ப திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த சோகம் நடந்துள்ளது. பலியான 18 பேரில் 9 பேர் குழந்தைகள், 9 பேர் பெரியவர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com